அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவல்களையடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்லையன் தலைமையிலான போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் வடக்கு தெருவில் பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது பெட்டிக்கடைகளில் விற்பனை செய்ததாக சரிதா (38) மற்றும் வீரன் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்