ஜெயங்கொண்டம் அரசு மருத்துவரை கண்டித்து சாலை மறியல்

84பார்த்தது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் கொண்டாயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கீதா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரத்தப்போக்கு இருந்ததால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி