அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி. மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 222. 45 மி. மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3381 மெ. டன் யூரியா, 976 மெ. டன் டி. ஏ. பி 625 மெ. டன் பொட்டாஷ்; மற்றும்; 3329 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள்; வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 34 மெ. டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 120 மெ. டன் என கூடுதலாக 154 மெ. டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 128 மெ. டன்; நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ. 17. 50 வழங்கப்படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கபட்டுள்ளது. எனவே விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. ரத்தினசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.