ஜெயங்கொண்டம்: ரூ. 3.72 கோடியில் ஆதிதிராவிடர் நலமாணவர்கள் விடுதி திறப்பு

78பார்த்தது
ஜெயங்கொண்டம்: ரூ. 3.72 கோடியில் ஆதிதிராவிடர் நலமாணவர்கள் விடுதி திறப்பு
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், மீன்சுருட்டியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், ரூ. 3.72 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல 100 மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடத்தினை, சென்னையில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஷீஜா, ஆதிதிராவிடர் நலத்துறை செயற்பொறியாளர் சி.த. அருண்குமார், மாவட்ட பொருளாளர் கு. இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம். பொய்யாமொழி, மாவட்ட அணி நிர்வாகிகள் எம்.ஜி. ராஜேந்திரன், R. வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி