அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பள்ளிச் சீருடைகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.