நூலகத்தை திறந்து வைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள அணிகுதித்தான் கிராமத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊரக நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன். நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், நூலக புரவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.