அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோதமான செயல்களை ஒழிக்க காவல்துறையுடன் இணைந்து போராட மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சிற்றரசு, முதல் நிலை காவலர் கொளஞ்சியப்பன் ஆகியோர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.