அரியலூர் அரசு சிமென்ட் ஆலையில், லோடிங் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அச்சங்கத்தின் கிளைச் செயலர் என. பி. தென்னரசு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர். சிற்றம்பலம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் கே. கிருஷ்ணன் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
மாவட்டச் செயலர் பி. துரைசாமி கலந்து கொண்டு, சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். மேலும் இந்த ஆலையில் பணிப்புரியும் லோடிங் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்ககைள் நிறைவேறும் வரை, சிஐடியு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.
விழாவில் லோடிங் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கணேசன், பொருளாளர் முரளி, துணைத் தலைவர்கள் ஆர். ராஜா எஸ். பூமிபாலன், ஆர். குணசீலன், கே. தர்மராஜ், கிளை துணைச் செயலாளர்கள் சி. குமரவேல், கே. ஆனந்த கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன் நன்றி தெரிவித்தார்.