ஜெயங்கொண்டத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

73பார்த்தது
ஜெயங்கொண்டம் அதிமுக சார்பில், ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்*

* ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்*

திமுக அரசின் மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்தும், சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி முன்பிருந்து கடைவீதி முழுவதும் அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமையில், நகரச் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கைகோர்த்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி