தைல மரத்தோப்பில் திடீர் தீ: 10 ஏக்கர் எரிந்து நாசம் (வீடியோ)

82பார்த்தது
ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான தைலமர தோப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தைல மரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் வடக்குப்பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 185 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரக்காடு உள்ளது. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரிந்து அடுத்தடுத்து பரவியது. இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 10 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து சாம்பலாகின. பின்னர் புகை மூட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தைல மரக்கட்டில் எறிந்த தீயிணை தண்ணீரால் பீய்ச்சு அடித்து அணைத்தனர். ஜெயங்கொண்ட பகுதியில் அடிக்கடி தைல மரக்காடுகள் எரிந்து வரும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக இது போன்ற தீ விபத்துகள் நடைபெற்று வருகிறதா அல்லது சமூக விரோதிகள் குடிபோதையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி