மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

1570பார்த்தது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் மது பழக்கம் உடைய அவர் தனது 13 வயதுடைய 3-வது மகளுக்கு கடந்த 2 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் கடந்த ஜூன் 5-ந்தேதி அவர் தனது மகளை தவறான நோக்கத்தில் பார்த்ததோடு, தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனை கண்காணித்து வந்த அவரது மனைவி தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்ப லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி