சட்ட மேதை அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை ஒட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சட்ட மேதை அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கரின் திருவருட்சிலைக்கு பாஜக அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அம்பேத்கருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.