அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி தேமுதிக நிர்வாகியன இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்ட சொல்லி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தொடர்ந்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.