அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு பாமகவினருக்கும் - காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம். கைது.
ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் அறிவித்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அன்புமணி தரப்பு பாமகவினர், கூட்டத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு.
இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படாத வகையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி அன்புமணி ஆதரவு பாமகவினரை கைது செய்தனர்.
பாமக மாவட்ட செயலாளர் கோ. தமிழ்மறவன், திருமால்வளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது.
இன்று காலை 10 மணிக்கு அரியலூர் மாவட்ட பாமக பொதுக்குழு என ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர், தனி வீடு ரவி அறிவித்துள்ள நிலையில் இதுவரை கூட்டம் தொடங்கப்படவில்லை.
அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தில் இருந்து கூடுதல் காவல்துறையினர் குவிப்பு.