திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கல்

53பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தத்தனூர் கடைவீதியில் கள்ளச்சாராயம் மரணம் மற்றும் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விக்ரம பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை. எஸ். ராஜேந்திரன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் எடுத்து கூறினார். அப்போது முன்னாள் எம். எல். ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க. பிச்சமுத்து மாவட்ட கவுன்சிலர் நல்லமுத்து, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவகுனசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி