அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழக அதிமுக சார்பில் புரட்சித் தலைவியின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் இருசக்கர வாகன வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது. பேரணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் தொடங்கி வைத்தார். சின்ன வளையத்தில் தொடங்கி ஜெயங்கொண்டம், செங்குந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து புரட்சிதலைவி மற்றும் புரட்சித்தலைவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் தங்கப்பிச்சமுத்து, ஒன்றிய கழக செயலாளர்கள் விக்கிரம பாண்டியன், கல்யாணசுந்தரம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் ஜெ. கோ. சிவா, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கே. கே. சி. செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்