அரியலூரையடுத்த பொன்பரப்பி மாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது: பக்தர்கள் தரிசனம்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் சாமுண்டீஸ்வரி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் முன்னதாகவே சுவாமிக்கு தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு மாரியம்மன் காளை வாகனத்திலும், சாமுண்டீஸ்வரி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினார்கள். மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு உற்சவ சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் மேளதாளங்கள் முழங்க மங்கள இசை உடன் முக்கிய வீதி வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது.