சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

66பார்த்தது
*உலக சுற்றுச்சூழல் தினம்*

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரியலூர் வாலாஜா நகரம் உதவி தோட்டக்கலை அலுவலர்
திரு அரங்கநாதன் கலந்துகொண்டு பேசுகையில் பூமியின் வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

பூமியை அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக ஒப்படைக்கும் பொறுப்பு பள்ளி மாணவர்களுக்கு உண்டு.

நெகிழி பொருள்களை தவிர்க்க வேண்டும் பொதுமக்களும் மாணவர்களும் துணி பையை பயன்படுத்த வேண்டும் உங்களால் இயன்றவரை மரக்கன்றுகளை நட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நிக்கில் ராஜ் கலந்து கொண்டார்


சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார் ஆசிரியர்கள் வெங்கடேசன் அந்தோணிசாமி அபிராமி.
ஆய்வக உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.
ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி