அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நத்தகுழி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது முன்னதாகவே விநாயகர் கோவிலில் இருந்து திரௌபதிஅம்மனுக்கு பூ பூ மாலை வளையல் பல்வேறு சீர்வரிசைகள் முக்கிய வீதி வழியாக மங்கள இசை உடன் திரௌபதி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்