*கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது இயல்பான ஓன்றுதான், வாடிக்கையான ஒன்றுதான்*
*விசிகவும் அதிக தொகுதிகளை கோரும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்*
*அதிமுக -பாஜக கூட்டணி வெற்றி பெறும் ஆட்சி அமைக்கும் என்பது ஒரு விதமான பில்டப்*
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.
என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு
ஒவ்வொரு கட்சியும் அப்படித்தானே சிந்திக்க முடியும், குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல வாய்ப்பில்லை.
நாங்களும் அப்படித்தான் சொல்றோம் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான் வாடிக்கையான ஒன்றுதான் ஆனால் பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம் அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில அவங்க உருவாக்கக்கூடிய குழுவிடம் தான் பேசுவோம்.