அரியலூர் மாவட்டத்தில் தொழில் பிரிவு பயிற்சி கட்டணம்

70பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் தொழில் பிரிவு பயிற்சி கட்டணம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையம், ஆகியவற்றில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8ம்வகுப்பு தேர்ச்சி 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி விண்ணப்ப கட்டணத் தொகை ரூபாய் 50. சேர்க்கை கட்டணம் ஒரு வருடம் தொழிற்பயிற்சி கட்டணம் ரூபாய் 185, 2 வருட தொழிற்பயிற்சி கட்டணம் ரூபாய் 195. விண்ணப்பிக்க கடைசி நாள் 30 -09 -2024 என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி