அரியலூர்: இரண்டு போலி டாக்டர்கள் கைது

1907பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி நடுபடுவை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்
ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து டாக்டர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்து மருந்து மற்றும் மருத்துவ உபகரங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தொடரும் போலி டாக்டர்கள் கைது சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி