போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பு

56பார்த்தது
*அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வார்த்தை 2012- அதிமுக ஆட்சியிலேயே நீக்கப்பட்டது. ஒரு சிலர் இப்போது தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சையை கிளப்பி வருகின்றனர் - அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பேட்டி. *

அரசு போக்குவரத்து கழகம் என்று இருக்கிறது. 'தமிழ்நாடு' என்ற பெயரை காணவில்லை என்று ஒரு சர்ச்சை சமீபத்தில் கிளம்பி இருக்கிறது.

அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி என்று தற்போது உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் என எழுதினால் நீண்ட பெயராக உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கியதால் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், தற்போது பேருந்து சேவை சென்று கொண்டிருக்கிறது.

எனவே பிரச்சினைகள் ஏதுமில்லாததால் போக்குவரத்து கழகத்தில் எதை குற்றம் சாட்டுவது என்று தெரியாமல், திடீரென்று தமிழ்நாடு இல்லை என குற்றத்தை கண்டுபிடித்து சொல்கின்றனர்.

மெட்ராஸ் மாகாணம் என இருந்த இந்த மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியதே நாங்கள் தான். இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி