அரியலூர்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு

0பார்த்தது
அரியலூர்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின்படி, 05.07.2025 இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரமோகன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். அரியலூர் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திரு. இராமலிங்கம் மற்றும் திரு. உலகநாதன் அவர்கள் உடன் இருந்தார்கள். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அரியலூர் நகரில் உள்ள ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் "ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிந்து ஆட்டோவை இயக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி மக்களை ஏற்றக்கூடாது, சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், அதிவேகமாக ஓட்டக்கூடாது, மது அருந்தி விட்டு ஓட்டக்கூடாது, நகர் பகுதியில் peak hours கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி