புகைவண்டி நிலையத்தில் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்.

80பார்த்தது
அரியலூர் புகைவண்டி நிலையத்தில் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறையும் தென்னக ரயில்வே சார்பாக அரியலூர் ரயில் நிலையத்தில் நிலைய சுகாதார ஆய்வாளர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலகு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரியா ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ரயில் நிலைய பாதுகாப்பு படை ஆய்வாளர் சரவணன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் சுகாதார ஆய்வாளர் அருள் பிரியன் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய கவுன்சிலர் வைஷ்ணவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டால் புற்றுநோய் மற்றும் சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும். ஆண்மை குறைபாடு ஏற்படும். பிறக்கும் குழந்தைகள் பிறவி ஊனத்தோடு பிறக்கக்கூடும். ஆகவே புகையிலை பழக்கத்தை கைவிடுமாறு பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. நிறைவாக புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது ஏராளமான பயணிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி