அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல், மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு ஆலோசகர் பிரியா, சமூக ஆர்வலர் வைஷ்ணவி ஆகியோர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகளிலிருந்து விடுபட அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.