அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த உஞ்சினி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற திரௌபதியம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இக்கோயிலில் திருவிழா கடந்த 8 ந்தேதி கொடியேற்றதுடன் துவங்கியது, திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன், திரவுபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலாவும் நடைபெற்றது.
இவ்விழாவில்
புகழ்பெற்ற மகாபாரத்தில் பஞ்சபாண்டவர்கள் கதையை படித்து 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தினத்தை மண்டகப்படியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வகையறாக்களும் திருவிழாவாக கொண்டாடி இறுதி நாளன்று திரௌபதி அம்மனுக்கு தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஏரிக்கரையில் இருந்து , பூங்கரகத்துடன் பம்பை, மங்கல இசையோடு முக்கிய வீதி வழியாக வந்து கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை சுற்றி வலம் வந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.
இந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.