அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தால் போட்டி நடைபெற்றன. 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு ஒரு பிரிவாக, 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் குரல் வளம் தெளிவு காலம் ஆகியவற்றை கொண்டு மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.