தமிழக அரசின் போட்டி தேர்வுகளில் தமிழ் தேர்வில் திருக்குறளில் இருந்து 10 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதனை ஒட்டி போட்டிக்கு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் திருக்குறள் வினாடி வினா போட்டி இன்று நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திருக்குறள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தனர்.