பெரம்பலூரில் டீக்கடையில், டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பெரம்பலூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சேகரித்து வருகிறார். இந்த நிலையில் வெங்கடேசபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரபாகரன் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் டீ போட்டு கொடுத்து அனைவரிடத்திலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் கவனத்தையும் ஈர்த்தது.