மாளிகைமேடு அகழாய்வு கொட்டகை சரிந்து விழுந்தது

1569பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் வரலாறு சிறப்புமிக்க கோவிலாக உள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் வாழ்ந்த அரண்மனை மற்றும் வரலாற்று செப்பேடுகளை அறியும் விதமாக அகழாய்வு பணிகள் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை சுவர்கள் சீன வளையல்கள், மண்பாண்டங்கள், பனை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாளிகை மேட்டில் அகழாய்வு பணிகளின் போது மழையிலிருந்து பாதுகாப்பதற்காக கீற்றுகளால் பின்னப்பட்ட ராட்சச கூரை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு தாக்கு பிடிக்காத அகழாய்வு ராட்ச கொட்டகை திடீரென சரிந்து அப்படியே கீழே விழுந்தது. இதனால் ராஜராஜ சோழன் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட அரண்மனை சுவர்கள் மற்றும் வரலாற்று செப்பேடுகள் பாதிக்கப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் வரலாற்று ஆய்வாளர்கள் தற்போது கவலையில் மூழ்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி