திமுக கூட்டணி சலசலப்பில்லாமல் ஒற்றுமையுடன் உள்ளது:

0பார்த்தது
*அதிமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பிஜேபியும் பங்கு என்றதால், அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். திமுக கூட்டணி சலசலப்பில்லாமல் ஒற்றுமையுடன் உள்ளது: அரியலூரில் அமைச்சர் கே. என். நேரு பேச்சு. *

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வாக்குச்சாவடி முகவரி கூட்டம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதிலஅ திமுக மத்திய மண்டல பொறுப்பாளரும் , திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு கலந்துகொண்டு பேசினார்.

இரண்டு மாதம் முன்பு வரை வருகின்ற தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம். தற்போது நமது கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால், எதிரணியினர் அப்படி அல்ல. பிஜேபி கூட்டணியில் இணைந்தவுடன், அதிமுக தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பிஜேபியும் பங்கு பெறும் என்று பாஜகவினர் சொல்லினர். ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி