அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. நேற்று மாலை எதிர் பாராத விதமாக திடீரென சிலிண்டர் வெடித்தது இதில் தீப்பற்றி கூரை வீடு முழுவதுமாக எரிந்ததில் கிட்டத்தட்ட 50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்த செந்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து தீயினை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.