அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களை அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுறுத்தினார். ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான ஆய்வு குழு மற்றும் பல்துறை பணி குழு ஆகியவை குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.