அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் அமைந்துள்ள தூய மேரி மாதா தேவாலயத்தில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை ஒட்டி அமைந்துள்ள மாதா தேவாலயத்தில் பங்கு தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.