அரியலூர் உள்ள தனியார் மண்டபத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் தென் மாநில செயற்குழு கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜம் தேசிய தலைவர் ஜெயராஜ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு கடைபிடிக்கும் அனைத்து நடைமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் உலக அளவில் உள்ள பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்து ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கூறினார். மேலும் ஐயப்ப தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு உதவுவது, விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பல செயல்களை அருகில் உள்ள கிராம மக்களை இணைந்து செய்து வருவதாக கூறினார். சபரிமலைக்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ள போதிலும், ரோப் கார் அமைக்கப்படும் இடம் மத்திய வனத்துறைக்கு சொந்தமாக உள்ளதால் ரோப்கார் அமைக்க தேவைப்படும் இடத்திற்கு பதிலாக மாற்று இடம் மத்திய வனத்துறையிடம் கொடுக்க மாநில அரசு தாமதப்படுத்தி வருவதால் சபரிமலைக்கு ரோப் கார் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருவதாக கூறினார்.