செந்துறை அருகே பெரும்பாண்டி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாகவே அம்மனுக்கு காப்பு கட்டி மகாபாரதம் பாடப்பட்டு வருகின்றது. இதில் முன்னதாகவே காப்பு கட்டி இருந்த பக்தர்கள் கடும் விரதம் இருந்து இன்று ஏரிக்கரையில் இருந்து சக்தி கரகங்கள் ஜோடிக்கப்பட்டு தீமிதி நடைபெற்றது. இதுவும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.