அரியலூர் - நான்கு கடைகளில் பூட்டை உடைத்து 1. 50 ஆயிரம் மதிப்பிலான டிவி மற்றும் கேமரா ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை கொள்ளை. மர்ம நபர்கள் கைவரிசை. வியாபாரிகள் அதிர்ச்சி.
அரியலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநாத் காம்ப்ளக்ஸ் இயங்கி வருகிறது. நான்கு வணிக நிறுவனங்களில் மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து சுமார் 1. 50 ஆயிரம் மதிப்பிலான டிவி மற்றும் கேமரா ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலையில் வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள் தங்களது கடைகளின் பூட்டு உடைபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அரியலூர் காவல் நிலையத்திற்கு கடை உரிமையாளர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புறவழிச்சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் கடைகளில் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. அரியலூர் பகுதிகளில் அரங்கேறி வரும் தொடர் கொள்ளையால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.