சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி

85பார்த்தது
அரியலூர் - சாலை பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் காவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து தலைக்கவசத்துடன் கொண்டனர்

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தொடங்கி வைத்தார் வாகன பேரணியில் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்போம் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தலைக்கவசம் அணிவோம் மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா உழவர் சந்தை நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று ஒற்றுமை திடலில் நிறைவடைந்தது பேரணியில் காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தலைமையில் உறுதி மொழியை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி