அரியலூர் மாவட்டம் திருமானூரில் அமைந்துள்ளது கொள்ளிடம் பாலம். இப்பாலம் அரியலூர் மாவட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் செல்கின்றனர். பாலத்தின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. அதனை விரைவாக சரிசெய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.