அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு. ரமண சரஸ்வதி பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய மாவட்ட ஆட்சியராக ஆணி மேரி சொர்ணா
பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செய்தி மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதிக்கு பாராட்டுக்களையும், அவரது பணி சிறக்க தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் செந்தில்குமார்,
தளபதி, ஜோதி ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்