அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரத்னசாமி தலைமை தாங்கினார். அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கொள்ளிடம் ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் புள்ளம்பாடி வாய்க்காலில் கண்டிராதீர்தம் ஏரியில் இருந்து சுக்கிரன் ஏரிவரை, வரத்து வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும். கொள்ளிடக்கறையை பலப்படுத்தி போக்குவரத்திற்கு ஏதுவாக பலப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்க விற்பனை நிலயங்களில் விதை உரம் ஆகியவற்றை போதிய அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். இயற்கை உரங்களை கூட்டுறவு விற்பனை மையங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வெள்ளப்பெருக்கு பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துடன், கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர் தங்கு தடை இன்றி அனைத்து ஏரிகளுக்கும் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.