அரியலூர் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரம் வாலாஜா நகரம் செல்லும் சாலையில் கயர்லாபாத் கிராமத்தில் வேகத்தடை உள்ளது. இதனை எச்சரிக்கை செய்யும் வண்ணம் நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை உள்ளது. என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையை உடைந்து கீழே தொங்கும் நிலையில் உள்ளது. இதனால் வேக தடை இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் வேகத்தடையில் வேகமாக சென்று விபத்து நேரிடலாம் ஆகையால் அவர்கள் அறிவிப்பு பலகையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.