அரியலூர் அரசு பள்ளியில் வரும் ஐந்தாம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20000 பணியிடங்களை நிரப்ப உள்ளனர். எனவே பத்தாம் வகுப்பு முதல் உயர் கல்வி படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.