ஜெயங்கொண்டத்தில் நாளை பவர் கட்: உஷார் மக்களே

1080பார்த்தது
ஜெயங்கொண்டத்தில் நாளை பவர் கட்: உஷார் மக்களே
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா பழூர், தழுதாழைமேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், தண்டலை, மேலூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர் கோவில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம் மற்றும் தா. பழூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தா. பழூர், சிலால், தேவமங்கலம், வானதிரையன்பட்டினம், அங்கராயநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அனைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைக்காட்டு, ஆயுதகளம் மற்றும் தழுதாழைமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்காவல்புத்தூர் உள்ளிட்ட பகுதி மற்றும் அருகிலுள்ள கிராம புரங்களிலும் நாளை 7 -ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி