அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,48,876 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட முழுவதும் 259 ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் வருகிற 6ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் 9ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.