அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனி அடையாள அட்டை பெறாத 26,292 விவசாயிகளுக்கு பி எம் கிசான் ஊக்கத்தொகை ஏப்ரலில் நிறுத்தப்படும். நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா சிட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி ஆகியவற்றுடன் அரசு அலுவலர்களையோ இ சேவை மையங்களிலோ தொடர்பு கொண்டு நில பதிவேற்றம் செய்தால் மட்டுமே பி எம் கிசான் ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும் என்றார்.