அரியலூர் அருகே மல்லூர் கிராமத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு நல்லா பிள்ளை ஏரியில் உள்ள கறைகளில் 5000 பனை விதைகள் நடவும் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சுந்தரம், மரங்களின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.