*4000 தட்டச்சு பள்ளிகளை மூடுவதற்கு காரணமாக உள்ள தமிழ்நாடு அரசாணையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு*
தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்தி வருகிறது
இதில் தமிழகம் முழுவதும் உள்ள 5000 தட்டச்சு பள்ளிகளில் 4 லட்சம் மாணவ மாணவிகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்விற்கு தயாராகி வருகின்றனர்
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த 2024ம் ஆண்டு வெளியிட்ட 187 அரசாணையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகள் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் தட்டச்சு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் எனவும் 2027 ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே தட்டச்சு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அரசாணை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் ஐயாயிரம் தட்டச்சு பள்ளிகள் அதில் பணியாற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனேவரையும் பாதிக்கும் வகையில் உள்ளது
தட்டச்சு தேர்வுகளை தட்டச்சு இயந்திரங்கள் மூலம் மட்டுமே நடத்திடவும் தற்போதுள்ள நடைமுறையிலேயே தட்டச்சு தேர்வுகள் நடத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எங்களது கோரிக்கையை கொண்டு செல்லும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கு மனு அளித்தனர்