திருநெல்வேலி மாவட்டம், வேப்பிலங்குளம் கிராம பஞ்சாயத்து செயலாளர் சங்கர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யக் கோரி இன்று ஒரு நாள் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டை, சோழமாதேவி, வெண்மன்கொண்டான், உள்ளிட்ட ஊராட்சி செயலாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.